Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

நியூஸ் -7 தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறதாம் ஜூலிக்கும், சக்திக்கும்… இருந்த பெயரை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று இழந்துவிட்டோமே என்று இருவரும் சமீபத்தில் சந்தித்தபோது புலம்பிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் ஜூலிக்கு வேலை கிடைத்துள்ளதாம். காம்பியர் செய்ய விரும்பி இண்டர்வியூவுக்கு சென்ற ஜூலி செய்தி வாசிக்க மாட்டேன் என்ற கண்டிஷனுடன் வேலையில் சேர்ந்துள்ளாராம். இந்த நிலையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் ஜூலிக்கு வேலை கிடைக்க சக்தி ரெகமண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக ஜூலி, சக்தியை யாரும் தாக்கி விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் சமீபத்தில் ஓவியா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நன்றி கூற ஓவியாவை இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Updated: August 21, 2017 — 4:17 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme