Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

பிக்பாஸ் அறையில் கண்ணீர் சிந்திய சுஜா வருணி… அடுத்த ஓவியாவா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் புதுவரவாக வந்திருப்பவர் சுஜா வருணி. இவர் வந்தது முதல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

இவர் நேற்று பிக்பாசிடம் தன் வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதாக கூறினார்.

முதல் படத்திற்கு பிறகு வர்ணஜாலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடினேன். அதன்பிறகு தொடர்ந்து அதே போன்று குத்து பாடல் வாய்ப்புகளே வந்தது. ஒரு கட்டத்தில் அதனை நிறுத்தி விட்டு தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறினார்.

மேலும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை என்று கூறி அழுதார். இது பார்வையாளர்களையும் உருக வைத்தது.

அதுமட்டும் அல்லாமல் ஐட்டம் டான்ஸ் என்று கூறாதீர்கள். உங்கள் வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் கெஸ்ட் என்று சொல்வீர்களா அல்லது ஐட்டம் என்று சொல்வீர்களா என்று சிந்திக்கவும் வைத்தார்.

இப்படி பேசித்தான் ஓவியா பேசி ரசிகர்களின் மனதை கட்டி போட்டார். அதே பார்முலாவை இவரும் தொடர்கிறார். கை கொடுக்குமா என்று பார்ப்போம்.

Updated: August 23, 2017 — 3:55 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme